தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்குமாறு தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக, உணவு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.