குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அதிமுக ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திமுக நாடகம் ஆடியதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், சி.ஏ.ஏ. சட்டம் குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சத்தை திரும்ப பெற கூறுவோம் என தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.