செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகம் எங்கும் களைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்! வேட்பு மனுத்தாக்கல் !

Mar 15, 2021 09:50:56 PM

தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

லவசங்களை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விட , அவர்களே சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், கோவில்பட்டி தொகுதி மக்கள் மாபெரும் ஆதரவளித்து நல்லதொரு சிறப்பான வெற்றியை தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வாஷிங்மிஷின் கொடுப்பேன் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம்,செய்யாறு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய கமலஹாசன், தங்களின் கட்சி வேட்பாளர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது நாளாக அதிமுக வேட்பாளர் நைனா கண்ணு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தண்டராம்பட்டு, தானிப்பாடி பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்த அவர் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நாசர் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய நாசர், தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் பாதாள சாக்கடை திட்டம்,குடிநீர் இணைப்பு,ஆவடி தொகுதி சீரமைப்பு என பல்வேறு பணிகளை செய்யப்படும் என்றார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் டாக்டர் சித்து திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். கடைத்தெரு, பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், மீனவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் டார்ச் லைட் சின்னம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் சென்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் கம்பம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சுரேஷ் சமுதாய தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் ஒன்றியங்களில் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சு.ரவி அறிமுக கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய ரவி, திமுகவின் பிரச்சாரத்தை முறியடித்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து திமுக மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அக்ட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருண் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் வருண், தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை செய்வேன் என உறுதி அளித்தார். தொடர்ந்து அவர் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அய்யனார் கோவிலில் திமுக வேட்பாளர் காந்திராஜன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர்.பின்னர் பேசிய காந்திராஜன், வேடசந்தூர் தொகுதி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று உரையாற்றினார்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சையது கான்சின்னமனூர் பகுதியில் சமுதாயத் தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளிக்க வேண்டுமென அவர்களிடையே வேண்டுகோள் விடுத்தார்.

நாகை தொகுதி அம முக வேட்பாளர் ஆர்சிஎம் மஞ்சுளா சந்திரமோகன்நாகூர் தர்கா பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய்ய வேட்பாளர் பிடி செல்வகுமார் அறிமுக இக்கூட்டத்தில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிடி செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்டத்தினை சுற்றுலாத் துறையின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உத்தரவாதம் அளித்தார்.

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா அறிவிக்கப்பட்டதால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அமமுக - தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு 60 தொகுதிகள் தேமுதிகாவிற்கு ஒதுக்கப்பட்டது. மேலும் 60 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலத்தில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரத்தினராஜனுக்கு பதிலான அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான கே.வி.ராமலிங்கம் அப்பகுதியில் தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கினார். எலவமலையிலுள்ள செல்லாண்டியம்மன் கோவிலின் சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்ட பின்னர் வாகனத்தில் சென்றும் வீடு வீடாகவும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தங்கள் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் அங்குள்ள மீனவர் குடியிருப்புகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெசண்ட் நகர் கடற்கரைப் பகுதியிலுள்ள ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மீன்வலைகளை உலர்த்தவும் மீனவர்கள் ஓய்வெடுக்கவும் மண்டபங்கள் அமைத்துத் தரப்படுமென எம்.கே.அசோக் வாக்குறுதி அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அப்பகுதியில் தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கினார். அத்தொகுதிக்குட்பட்ட சின்னாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியினை திமுக அமைக்கும் என வாக்கு சேகரிக்கும் போது குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி,  பள்ளிபாளையம், சமயசங்கிலி, கரைமேடு, சீராம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்திட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பள்ளிபாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வத்து பேசிய அமைச்சர் தங்கமணி, திமுகவினால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும், கட்ட பஞ்சாயத்து, நில மோசடி, நில அபகரிப்பு போன்ற முறைகேடுகள் மட்டுமே திமுகவினருக்கு தெரியும் எனவும் குற்றஞ்சாட்டினார். 

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அம்மன் அர்ஜுனன், காந்தி மாநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவர், அப்பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி,  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக அவருக்கு பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான தானேஷ் என்கிற முத்துக்குமார் அப்பகுதியில் தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கினார். அத்தொகுதிக்குட்பட்ட ஆண்டிபாளையம், மேல மாயனூர், கட்டளை ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று பெரியவர்கள் காலில் விழுந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரை, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள நல்லறவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், நத்தத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திறந்தவெளி வாகனத்தில் பயணித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து துவங்கி வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ சென்ற அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையிலுள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார். 

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகள் தீவிரம்:

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக வளர்ச்சி பெறாமல் இருந்த திட்டங்களை 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளதாக தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கூறினார். பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த வேலுமணி, தேர்தல் அதிகாரி செந்தில் அரசனிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ். மஸ்தான், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  தேசூர் பேட்டையிலிருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாக வந்ததால், தாமதமாகிப் போனதாகக் கூறப்படும் நிலையில், வட்டாட்சியர் அலுவலம் அருகே வந்த பின் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்து அவர் மனுத்தாக்கல் செய்தார். 

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சாக்கோட்டை க.அன்பழகன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் அமைச்சர் சரோஜா வேட்புமனு தாக்கல் செய்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொண்டர்கள்  புடைசூழ ஊர்வலமாக சென்ற அமைச்சர் சரோஜா, வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சக்திவேலுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் கே.குப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பா.வளர்மதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன், வேட்பு மனு தாக்கல் செய்தார். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளர் வி.என்.ரவி.வேட்பு மனுதாக்கல் செய்தார். அதேபோல் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மயில்சாமியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சுமனிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணி, வட்டாட்சியர் அலுவகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

கடந்தமுறை தோல்வியடைந்தாலும் மக்களுக்கான திட்டங்களை கொடுத்திருக்கிறேன் என பாஜக சார்பில் கோவை தெற்கு மண்டல தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கூறினார். மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்த வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் திமுக சார்பில் போட்டியிடும் "ஐ டீரீம்ஸ்" மூர்த்தியை எதிர்த்து களம்காண்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஷெனாய் நகர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கும் அமைச்சர் தங்கமணி வேட்புமனுதாக்கல் செய்தார். குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், தேர்தல் அலுவலர் மரகதவல்லியிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ். மஸ்தான், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  தேசூர் பேட்டையிலிருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாக வந்ததால், தாமதமாகிப் போனதாகக் கூறப்படும் நிலையில், வட்டாட்சியர் அலுவலம் அருகே வந்த பின் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்து அவர் மனுத்தாக்கல் செய்தார். 

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வழக்கம்போல தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியின் அம்பாசிடர் காரில் வந்து மனுத்தாக்கல் செய்தார். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கடந்த 1988 ஆம் ஆண்டு இந்த அம்பாசிடர் காரை வாங்கினார். தந்தையின் நினைவாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அந்தக் காரில் வந்து மனுத்தாக்கல் செய்வதை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழக்கமாக வைத்திருக்கிறார். 

சென்னை ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நாசர் நூற்றுக்கணக்கானோருடன் ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்தார். ஆவடி காமராஜ் நகரிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்த அவர், பட்டாபிராம் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, திமுக தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் வேட்பு மனுவை அளித்தார். அதேபோல் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுந்தரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

ரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.முருகேசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். காய்கறி மார்க்கெட் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் நடந்து சென்று, ஆதரவு திரட்டினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3- வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் K.K.S.S.R ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தமது வேட்புமனுவை அவர் சமர்ப்பித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் , வீட்டுக்கு வீடுகுடிநீர் விநியோகிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.சந்திரன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கெ.பேட்டை பகுதிகளிலிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோருடன் ஊர்வலமாகச் சென்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

சென்னை மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மூர்த்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று அவர் மனுத்தாக்கல் செய்தார். 

கருர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் P.S.N தங்கவேல்  வேட்பு மனு தாக்கல் செய்தார். வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். 

சென்னை - பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். இங்குள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் லலிதாவிடம் தமது வேட்புமனுவை அவர் சமர்ப்பித்தார். 

சென்னை - தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் S.R.ராஜா, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த S.R. ராஜா, அங்கு, தொகுதி தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் சக்ரபாணி, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் திமுக நிர்வாகிகளுடன் சென்று, சக்ரபாணி, தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி உள்ளிட்ட 3 கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் 4வது முறையாக போட்டியிடும் ரவி, வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவதாஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமியும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சுதாகரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார். 

வேளச்சேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீர்த்தனா, வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆண்டி அம்பலம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகளுடன் சென்று, ஆண்டி அம்பலம் தமது மனுவை தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சக்கரபாணி வேட்பு மனு தாக்கல் செய்தார். வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் சங்கரலிங்கத்திடம் சக்கரபாணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது உற்சாக மிகுதியில் கட்சித் தொண்டர் ஒருவர் சக்கரபாணியை தோளில் அமர வைத்து சிறிது தூரம் தூக்கிச் சென்றார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்
வேட்பாளர் K.K.C. பாலு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் இலாஹிஜானிடம் தமது மனுவை சமர்ப்பித்தார்.

 

 


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement