காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தது, குடி மராமத்துத் திட்டத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரிச் சீரமைத்தது உட்பட 60 சாதனைகளைத் தங்கள் ஆட்சிக்காலத்தில் செய்ததாக அதிமுக பட்டியலிட்டுள்ளது.
வெற்றிநடை போடும் தமிழகம் என்னும் தலைப்பில் உள்ள சாதனைப் பட்டியலில், காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகப் பரப்பில் குறுவை நெல் பயிரிடப்பட்டு 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா திறந்தது, பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பை 90 நாட்களில் இருந்து 270 நாட்களாக உயர்த்தியது ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 21 பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் திறந்ததையும் குறிப்பிட்டுள்ளது.