தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர் சாதன பேருந்துகளின் எண்ணிக்கையை நானுறாக . அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் முதல் அரசு ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தமுள்ள 700 ஏ.சி. பேருந்துகளில் கடந்த மாதம் வரை 280 மட்டுமே இயக்கப்பட்டன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 120 ஏ.சி.பேருந்துகளை இயக்கி வருவதாகவும், மொத்தம் 400 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.