கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க 700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
துக்க நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடைகள், வணிக வளாகங்களில் நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.