உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்கள் நோய்கள் பரவும் வகையில் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
இதனை அப்புறப்படுத்தும் விதத்தில், இடப்பற்றாக்குறை ஏற்படாத வகையில் அவற்றை புதைக்காமல் தகனம் செய்ய மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான விசாரணையில், அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்டதையடுத்து, அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.