அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பிறகு வானம் தெளிவாக காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு என்று தனிப்பட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.