அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூட்டத்திற்கு வந்த முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும் என அதிமுகவினரை அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் பணியில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க தேனீக்கள் போல் அனைவரும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.