தமிழகத்தில் 118 தொகுதிகளில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆர்கே நகர், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கு பின் நடைபெற்ற ஆய்வில், தமிழகத்தில் அதிக பணப்பட்டுவாடாவுக்கு வாய்ப்பு உள்ள தொகுதிகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி 118 தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 272 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறக்கூடுமென கூறப்பட்டுள்ளது.