தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 65 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வந்துள்ளது என்றும், வரும் 19ஆம் தேதி காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் தமிழகம் வரவுள்ளதாகவும் கூறினார்.
மேலும், வேட்பாளர்கள் ஆன்-லைன் மூலம் வேட்புமனு விண்ணப்பத்தை பெறலாம், அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
கல்லூரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது தொடர்பான புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் சத்தியபிரதா சாகு கூறினார்