அமமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக தனித்துப்போட்டியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக திரைமறைவில் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதுகுறித்து தேமுதிக வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் எனவும் விரைவில் முடிவு எட்டப்படும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமமுக உடனான கூட்டணியில் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் மற்றும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சிக்கல் எழுந்துள்ளதால் தேமுதிக தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது.