சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் விவகாரத்தில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து அவருடன் பணியிலிருந்த மேலும் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பியை தடுக்க முயன்றதாக எஸ்.பி. கண்ணன் முதலில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று அவருடன் சேர்ந்து பெண் எஸ்.பியை சென்னை செல்ல விடாமல் தடுத்ததாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட 19 பேர் கூண்டோடு வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.