செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அதிமுக பட்டியலில் கல்தா கொடுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள்..! காதல் முதல் மோதல் வரை..!

Mar 11, 2021 05:07:07 PM

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சர்ச்சைக்குள்ளான எம்.எல்.ஏக்கள் முதல், தொகுதியில் சத்தமே இல்லாத எம்.எல்.ஏக்கள் வரை, மொத்தம் 47 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் இறங்கி விவசாயி ஒருவரிடம் வாய் சண்டையில் ஈடுபட்ட ஆத்தூர் தனித்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு இந்த முறை களத்தில் இறங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கொரோனா காலத்தில் உறுதியான தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, தொல்லை கொடுத்து பணியிட மாற்றம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மனுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை..!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனான மோதலை, கட்சி கூட்டத்தில் சாதிய மோதலாக மாற்ற நினைத்து முழங்கிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கும் கட்சிக்கும் அவ்வப்போது செக் வைக்கும் வகையில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த பெருந்துறை எம். எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு செக் வைக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு பேட்டியின் போதும் டிடிவி தினகரன், அதிமுகவில் தனது சிலீப்பர் செல் இருப்பதாக கூறினாலும், கடைசி வரை அவரால் அடையாளம் காட்ட இயலாத நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து திரும்பிய அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைசெல்வன் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

 அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது சற்று அதிகமாக உணர்ச்சிவசப் பட்டதாலும், இணைந்த பின்னர் உள்ளூர் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாலும், கவுண்டம்பாளையம் வி.சி.ஆறுக்குட்டி, மேட்டூர் செம்மலை, ஊத்தங்கரை மனோ ரஞ்சிதம், மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ், ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது

மேலும் தங்கள் தொகுதியில் சொந்த செல்வாக்கு இழந்ததாக அறியப்பட்ட 3 அமைச்சர்கள் உள்ளிட்ட மொத்தம் 47 பேருக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் கல்தா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் இந்த தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ள, செழிப்பான வேட்பாளர்களுக்கு அதிகம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 


Advertisement
திருப்பத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
லிப்ட் வெல்லில் மோட்டார் பொருத்த பாதாள சாக்கடையின் உள்ளே கயிறு கட்டி இறக்கப்பட்ட ஊழியர்
நீர்நிலை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அலுவலகம் காட்டியதால் இடிக்கப்பட்டது...
வாகன தணிக்கையின் போது தலைமறைவாக இருந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
ஆளில்லாத வீடுகளில் பூட்டை உடைத்துத் திருட்டு... முகமூடித் திருடன் குறித்து போலீஸ் விசாரணை
பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தேடப்பட்ட 2 ரவுடிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கைது
சொத்து நகல் கிடைக்க தாமதம் ஆனதால் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கதவைப் பூட்டிப் போராட்டம்
99 முறை பைபர் கேபிள் திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த துணிக்கடை உரிமையாளர் கைது

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement