பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்பி அளித்த புகார் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்பி ராஜேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 50பேரிடம் விசாரிக்கப்பட்டு வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.