தேமுதிகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதால் பாஜகவிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது என அவர் பதிலளித்தார்.