திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
அந்த 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சென்னையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில், திமுக - கொ.ம.தே.க இடையே தேர்தல் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது, புதன்கிழமை இரவுக்குள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.