மதுரை அருகே அரசியல் கட்சிகளால் ஊரின் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதற்காக கட்சி பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள் உள்ளிட்டவற்றுக்கு பல தலைமுறைகளாக தடை விதித்துள்ளனர் கிராம மக்கள்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் ஒத்தவீடு என்ற அந்த கிராமத்தில் அரசியல் கட்சி போஸ்டர்கள், பேனர்கள் மட்டுமின்றி சமுதாய தலைவர்களின் படங்கள், ஒலிபெருக்கி பிரச்சாரம் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
தேர்தல் பரப்புரை காலங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கட்சிக் கொடியுடன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டு, ஊர் எல்லையிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
வேட்பாளர்கள் மட்டும் வந்து ஊரின் மைய பகுதியில் நின்று வாக்கு கேட்டு விட்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.