அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா? என ஆராய்ந்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு சார்பில், தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அளிக்கின்றன என்றும், இந்த தேர்தல் வாக்குறுதி அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா? என ஆய்வு செய்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக, வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.