வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
எம்.பி.சி வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.