தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 556 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 532 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். சென்னை மாநகரில் 229 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு பதிவாகவில்லை என அறிவித்துள்ளது.