தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரள வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமான அடுத்த இரு நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், பிற தென் மாவட்டங்களில் லேசானமழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு கரூர், நாமக்கல், சேலம்,ஈரோடு, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உயரக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களுக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.