வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் தனித்துவமான சின்னங்களை வேட்பாளர்களுக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தங்கள் கட்சிக்குத் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கும்படி அளித்த மனுவைப் பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
சின்னங்கள் குழப்பம் குறித்து தாமதமாகப் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், பிற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.