சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தங்கள் வாழ்வியலின் பல்வேறு சவால்களை மனஉறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி அவர்தம் பாதுகாப்பை அதிமுக அரசு உறுதிசெய்யும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.