தேர்தல் நேரங்களில் பொதுஇடங்களில் சாதி வெறியை தூண்டும் விதத்தில் நடந்து கொள்வோர் எந்த கட்சியினராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புதிய வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பாடல் பாடியும் இசை கருவி இசைத்தும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.