கிருஷ்ணகிரியில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசர் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.
கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தாளமேடு என்ற பகுதியில் தந்தை பெரியாருக்கு மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் டயர் மீது தீயை பற்ற வைத்து, சிலை மீது வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. வெண்கல நிறத்தில் இருந்த பெரியாரின் சிலை முழுவதும் கருப்பு நிறமாக மாறியது.
இதனை அறிந்த அப்பகுதி மக்களும், திராவிடர் கழகத்தினரும், சிலைக்கு தீ வைத்து அவமதித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.