பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாததால் தொற்று அதிகரித்து வருகிறது என்றார். 500-க்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்பு, அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், பாதிப்புள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.