தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
6 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென்றும், அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும்,குறைந்த பட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.