தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தமிழகத்தில் நேற்று வரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாகு தெரிவித்துள்ளார்.
நேற்று வரை 10 கோடியே 35 லட்ச ரூபாய் பணம், வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட இருந்ததாக 65 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் முழு உடல் கவசத்துடன் வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.