தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விருப்ப மனுவை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு தாக்கல் செய்தார். விண்ணப்பத்தில் எந்த தொகுதியில் போட்டி என்பதை மட்டும் குறிப்பிடவில்லை.
பெரும்பாலும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.