லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை மாதவரத்தில் நேற்று நடந்த பொதுக்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைத்து, டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையை 20 ஆண்டுகளாக நீட்டித்து மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் வரும் 15ஆம் தேதி நடக்க இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.