சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 7-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
நேர்காணலானது 6-ம் தேதியுடன் முடிவடையும் சூழலில், 7-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது. அன்றைய தினம் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.