காவல்நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
விசாரணைக்காக காவல்நிலையத்திற்காக அழைத்து வரப்படுவோர் மற்றும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைக்குள்ளாவதை தடுக்க காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நிதியை ஒதுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் இதுதொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யவும் ஆணையிட்டிருந்தது. ஆனால் அதனை தாக்கல் செய்யாதது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர்,நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதனையடுத்து காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளை நிகழாண்டிற்குள் நிறைவு செய்ய தமிழகத்திற்கு காலக்கெடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.