திருப்பூர் ஏ.டி.எம் திருட்டு வழக்கில் கைதான 6 பேரிடமிருந்து கைத்துப்பாக்கிகள், 69 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் கூலிப்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாங்க் ஆப் பரோடா ஏ.டி.எம் எந்திரத்தை காரில் கட்டி பெயர்த்து சிலர் எடுத்துச் சென்றனர். திருட்டுக்குப் பயன்படுத்திய கார், லாரி, உடைந்த ஏ.டி.எம் எந்திரத்தின் பாகங்கள் உள்ளிட்டவை ஈரோடு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 69,120 ரூபாய், 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள், வெல்டிங் எந்திரம், சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.