தமிழகத்தில், மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 473 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையை சேர்ந்த 74 வயது பெண் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். சென்னை பெருநகரில், 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.