கடலூரில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் காரில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டுவந்த 51 லட்ச ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், பொருட்கள் வழங்குவதைத் தடுக்கக் கடலூரில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சின்ன கங்கணாங்குப்பத்தில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை நிறுத்திப் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அதில் உரிய ஆவணங்களின்றி 51 லட்ச ரூபாய் வைத்திருந்ததைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனம் சார்பில் கடலூர் பெரியபட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாகவும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மங்களூரில் இருந்து பணத்தை எடுத்து வந்ததாகவும் காரில் இருந்த ராம்பிரசாத் என்பவர் தெரிவித்தார்.