கோடைக் காலத்தில், தமிழகத்தின் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்துக்கான கணிப்புகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மஹாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள், கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில், பகல் நேர வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.
அதே நேரத்தில், தென் மாநிலங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.