தமிழகத்தில் இன்று அல்லது நாளை முதல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்மாவட்டங்களில் இயல்பை விட சுமார் 6 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வருகிற 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்க கடலில் இருந்து ஈரக்காற்று வீசுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.