தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை - திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மாநகரின் 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
திருவல்லிகேணியில் விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்த திமுக கொடிகள் அகற்றப்பட்டன