புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 800 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமயம் அடுத்த கண்ணனிப்பட்டியில் உள்ள தனியார் குடோனில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய சோதனையில் ஆயிரத்து 800 ஜெலட்டின்கள் குச்சிகள், மற்றும் 600 டெட்டனேட்டர் இணைப்புகள் சிக்கியது.
வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கலில் ஈடுபட்ட குடோன் உரிமையாளர் அந்தோணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.