சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவத்தினர் நெல்லை வந்தனர்.
தேர்தலின் போது பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் தமிழகம் வரவழைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் முதல்கட்டமாக அசாமில் இருந்து 804 எல்லைப் பாதுகாப்பு படையினர் ரயில் மூலம் மதுரை வந்தனர்.
அவர்களில் 84 பேர் நெல்லைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டுள்ள அவர்கள் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்தார்.