செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"என் வீடு, என் தோட்டம்" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..!

Feb 28, 2021 03:10:46 PM

புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வயதான ”இளைஞர்” ஒருவர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் நைனார்மண்டபம் வண்ணாரத் தெருவுக்குச் சென்றால் தனித்துத் தெரிகிறது புரூரவனின் வீடு. காங்கிரீட் காடுகளாகி வரும் நகர்புறத்தில், தோட்டப் பயிர்களை வளர்ப்பது என்பது பலருக்கு கனவாக இருந்து வரும் நிலையில், மாடித் தோட்ட விவசாயம் அவர்களுக்கு ஓரளவுக்குக் கை கொடுக்கிறது.

அந்த மாடித் தோட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட புரூரவனுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குடியிருந்த வீடு சரியாக கை கொடுக்கவில்லை.

மாடித் தோட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எண்ணிய புரூரவன், சொந்தமாக இடம் வாங்கி, இந்த வீட்டை அதற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். 20க்கு 60 அளவுள்ள மாடியில் தண்ணீர் உள்ளே இறங்காதவாறு புரோக்கன் டைல்களை பதித்து, அரை அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி, குட்டி வயலாகவே மாற்றியுள்ளார் புரூரவன். கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், முருங்கை என காய்கறி வகைகள், சாமந்தி, சீத்தா பழம், வாட்டர் ஆப்பிள், பார்பேடா செர்ரி, மினி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை எனப் பழ வகைகள், வெற்றிலை, விங்டு பீன்ஸ், சுரை, குடல், பாகல் என கொடி வகைகள் என அடர்த்தியான விவசாயக் காட்டை உருவாக்கி வைத்திருக்கிறார் புரூரவன்.

குறிப்பாக வெங்கேரி, உஜாலா, ஒடிசா உள்ளிட்ட 10 அரிதான கத்தரிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இது அத்தனைக்கும் 100 விழுக்காடு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறும் அவர், பழுதடைந்த வாஷிங் மெஷினை காய்கறிக் கழிவுகளை மட்கச் செய்வதற்கான கலனாக பயன்படுத்துகிறார்.

கணவன், மனைவி, மூன்று மகன்கள், அவர்களது மனைவிகள், பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் புரூரவனுக்கு இந்த மாடித் தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் போதுமானதாக இருக்கிறது. தங்களது தேவைக்குப் போக கிடைப்பவற்றை, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிடுவதாக அவர் கூறுகிறார்.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை நடத்தும் மலர் கண்காட்சியில் மாடித்தோட்டம் பிரிவில் இதுவரை 6 முறை முதல் பரிசை வென்றுள்ள புரூரவன், மாடித் தோட்டம் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுவோர் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.


Advertisement
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !
கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன ? - எஸ்.பி. வேலுமணி கேள்வி
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement