செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்!

Feb 28, 2021 08:27:04 PM

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முதலில் கூட்டணி முடிவு செய்யப்பட வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் கூறியிருந்த நிலையில்,  நான் தான் முதல்வர் வேட்பாளர் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் பட்டியல் என அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

இந்தநிலையில், தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயகக் கட்சியும் மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து கூட்டணியில் இணைந்தனர். அதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு "எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை முதலில் முடியவேண்டும். அதன் பிறகு தான் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என கூறினார். மேலும், அதிமுகவுடன் 10 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணித்த சமகவை அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அழைக்கவில்லை. இருப்பினும் மக்கள் பணியை எந்த வித தொய்வில்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக அங்கிருந்து வந்து விட்டோம் என தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னைத்தான் கட்சி சார்பில் முடிவு செய்துள்ளார்கள், அது அவ்வாறே இருக்கும் என்றார். மேலும் நாங்கள் 'காம்ப்ரமைஸ்'க்கு பேர் போனவர்கள் அல்ல என்றும், நல்லவற்றை மட்டுமே காம்ப்ரமைஸ் செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார். 

 முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி இறுதி செய்யப்பட்டால் தான் சொல்ல முடியும் என சமக தலைவர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மநீம  தலைவர், தான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது பணியாற்றிய சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை
நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்
தூத்துக்குடி ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகாக வேலைநிறுத்தப் போராட்டம்
மெரினா லூப் சாலையில் போலீசாரிடம் தகாராறில் ஈடுபட்ட நபர்கள்
உடுமலை நகராட்சியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் வீடுகளில் சூழ்ந்த மழை நீர்
கனமழையால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டவருக்கு சிறை
தனியாக வசிக்கும் முதிய தம்பதியை கொடூரமாகத் தாக்கி நகைப் பறிப்பு
வீடு ஒன்றில் அடியாட்களுடன் நுழைந்து சேதப்படுத்திய ஊராட்சித் தலைவர்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement