காஞ்சிபுரத்தில் ஜேப்பியர் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
அக்கல்லூரியின் 12 மாணவர்களால் உருவாக்கப்பட்ட 460 கிராம் எடையுள்ள, யூனிட்டி சாட் ஜே.ஐ.டி சாட் என்னும் செயற்கைக்கோள் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரம் உள்ளிட்டவற்றை எளிதில் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள நிலையில், அதனை கண்காணிப்பதற்கான தரைதளக் கட்டுப்பாட்டு மையமும் கல்லூரியிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.