மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சொந்த ஊரான வெள்ளை மலைப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், பாலன் இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.