கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தவறு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது என்றார்.
விவசாயிகள், மகளிர் வைத்த கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் மற்றும மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதால் தான், தாங்கள் செய்வதாக கூறுவது தவறான பிரச்சாரம் என்றும் முதலமைச்சர் கூறினார்.