தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் தாக்கல் செய்த மனுவில், பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்திய பின்னரே பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தினால் பணிமூப்பு காலம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.