கொரோனா காலத்தில் இந்தியா தனக்கென தனி வழியை உருவாக்கியதோடு, மற்றவர்களுக்கும் உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் குறைவான கொரோனா இறப்பு விகிதம் இருப்பதாக கூறிய பிரதமர், இந்தியாவில் தான் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
மருத்துவம், பல்மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள் பயின்ற 21,889 பேர் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.