தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பி.எட். கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின் போது உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அதே போன்று, மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
மேலும், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அறிவித்துள்ளார்.