சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் அவரின் மனைவி தன் ஆண் நண்பருடன் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், முருகன் என்பவர் வழக்கறிஞராக, 'பிராக்டீஸ்' செய்து வந்தார். கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில், மனைவி லோகேஷினியுடன் வசித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கோடம்பாக்கம் பகுதியில் புதியதாக வாடகைக்கு வீடு பார்க்க சென்றிருந்தார். அப்போது, ஆட்டோவில் அவரை சிலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர், திடீரென முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூலிப்படையை ஏற்பாடு செய்து, கொலை நடந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.முருகனின் மனைவி லோகேஷினி, சண்முகநாதன் கூலிபடையினர் கோலார் சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் என 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்களுக்கு எதிராக, குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜராகி, கொலையை நேரில் பார்த்தவர்கள், சம்பவ இடத்தில் கிடைத்த சாட்சிகள் என வழக்கின் அனைத்து சாட்சிகளையும் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வக்குமார், சண்முகநாதன், லோகேஷினி உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், முருகனை கொலை செய்வதற்கு முன்பு, சண்முகநாதனுடன் லோகேஷினி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், கூலா இருடி செல்லக்குட்டி என்று முதலில் சண்முகநாதன் பேசுகிறார். பிறகு, நேற்று என்ன நடந்துச்சுனு தெரியுமா. பக்கத்து வீட்டுல எல்லாரும் வெளியிலே உட்கார்ந்துருக்காங்க. பசங்க கரெக்டா வந்துட்டாங்க எதிரெதிர ஆள் இருந்ததால எதுவும் பண்ணணல என்கிறார். அதற்கு லோகேஷினி, ''அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. தப தபனு கதவை தட்டி திற திறனு ஒரே கத்து. ஒரு வேளை நீதான் அவரை முடிச்சுட்டா. வாட்ச்மேன் அதை பார்த்துட்டுதான் வந்து கதவை தட்டுறாரோ என்று நினைச்சேன். அப்புறம் பார்த்தா அவன் வந்து கதவை தட்டி கத்துறான். உடனே நான் கதவை திறந்து விட்டேன். பால்கனில போய் பார்த்தான். அப்புறம் எங்கிட்ட வந்து, என்னை யாரோ கொலை செய்ய வந்ததாக சொன்னான். ஏன் இந்த மாதிரிலாம் பேசுறா... நீ என்ன பைத்தியமா என்று நான் அவனிடத்தில் கூறினேன். இதுக்கு முன்னாடியே இதே போல யாரோ என்னை கொலை செய்ய வந்தாங்க. நான் ஒரு லாயர். எனக்கே இந்த நிலையா என்று சொன்னாரு என்கிறார் லோகேஷினி. செல்லம், நான் சொல்றதை கேளேன் என்று கூறும் சண்முகநாதன், கூலா இருடி செல்லக்குட்டி என்று லோகேஷியிடம் சொல்கிறார். அதற்கு, நீ ஏண்டா அதுல இன்வால்வ் ஆகிறா. உனக்கு ஏதாவது பிராப்ளம் வந்துச்சுனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்கிறார் லோகேஷினி. அதற்கு, சண்முக நாதன் , உனக்காகத்தான் நீ சந்தோஷமாக இருக்கனும்னுதான் நான் இதையெல்லாம் நான் செய்யுறேன். பின்ன எதுக்கு இப்படியெல்லாம் பேசுறா'' என்று சண்முக நாதன் கூறுகிறார்.